tilaxan profile photo.jpg

கேமரா பின்னால்:  தர்மபாலன் திலக்சன்

கமரா மற்றும் தொழிநுட்பத்துக்கிடையான கொடுத்துவாங்கலின் கவர்ச்சியே தர்மபாலன் திலக்சனை முதலில் ஒளிப்படத்துக்குள் முன்தள்ளியது. தான் எதிர்கொள்ளும் இடங்கள், நபர்கள், பொருட்களில் தனக்கான தூண்டல்களினைத் தேடிக்கொண்டு கடந்த 08வருடங்களாக இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகள் முழுவதும் ஓர் சுயாதீன ஒளிப்படக்கலைஞராகப் பயணித்துக் கொண்டிருக்கிறார். இவரது இவ்வாறான தேடலும், தொழிற்பாடும் பல்வேறு காட்சிப்படுத்தல்களுக்கான வழியினை அவருக்கு வழங்கியது. ஆவ்வகையே 2016இல் யாழ்ப்பாணத்திலுள்ள சன்மார்க்க ஐக்கிய இளைஞர் கழகத்திலும், 2017இல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்திலும், 2018இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைவட்டத்திலும் தனது காட்சிகளினை செய்துள்ளார். இதுமட்டுமன்றி இவரது ஒளிப்படங்கள் பற்றி இலங்கையில் வெளிவரும் பத்திரிகைகளான வீரகேசரி, உதயன் ஆகியனவும் ஜீவநதி சஞ்சிகையும் வெளியிட்டுள்ளன. திலக்சன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையில் கற்றதோடு தற்போது நூலகம் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். திலக்சனை இங்கே தொடர்புகொள்ளக்கூடியதாகவிருக்கும்.

இந்த வலைத்தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நான்கு ஒளிப்படங்கள் பற்றி திலக்சன் கீழே அறிமுகம் செய்கிறார்:

இலங்கையின் வடக்கு, கிழக்கு நிலவுருக்களினைப் படமெடுப்பதில் எனது ஆர்வம் மூழ்கிப்போயுள்ளது. இந்நிலவுருக்கள் ஏதோவொன்றினைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன. தற்போது யாழ்ப்பாணத்திலுள்ள என் வயதினை ஒத்த பலர் இந்நிலவுருக்கள் எங்கேயோ இருக்கின்றன, இவ்விடங்களினைக் காண பஸ் அல்லது விமானத்தில் பயணிக்கவேண்டும் என நினைக்கின்றனர். யாழ்ப்பாணத்திலுள்ள இளையவர்கள் அழகுடன்கூடிய இவ்விடங்களினை விட்டுவிட்டு படம் எடுக்கவும், உற்சாகத்தைத் தேடியும் வேறு இடங்களினைத் தேடிப்போகின்றனர். நான் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய இடங்களில் படம் எடுத்துள்ளேன். ஏனெனில் இவ்விடங்களில் அழகுக்கு அப்பால் ஏதோவொன்று இணைந்துள்ளது.

இந்த ஒளிப்படம் வெள்ளம் நிரம்பிய நெல்வயலில் வரிசையாக நிற்கும் பனைமரங்கள் ஆகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமேற்குப் பகுதியிலுள்ள வட்டுக்கோட்டையில் ஓர் மழைக்காலத்தில் எடுக்கப்பட்டது.

tilaxan 5.jpg

யாழ்ப்பாணக் குடாநாட்டின் மேற்குக் கரையோரத்திலுள்ள ஓர் தீவான காரைநகரின் மாட்டுவண்டிச்சவாரியின் படங்களின் சேகரிப்பே எனது முதலாவது கண்காட்சியாகும். நான் மாட்டுவண்டிகள் எதனைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன என்பதில் ஆர்வமுற்றேன். ஏனெனில் நவீன தொழிநுட்ப வருகையுடன் கார், பஸ், லொறி என்பவற்றின் வருகை நிகழ்வதால் மாட்டுவண்டிகள் மிக விரைவாக அருகிப்போய்விட்டன. பெறுமதி என்பது புதிதாக வரும்பொருட்களுக்கு மட்டும் இருப்பதல்ல யாழ்ப்பாணத்தில் பல மரபுரிமைத்தளங்கள், வரலாற்றுக் கட்டடங்கள் மிக அழகும், பெறுமதியும் உடையன. இவை அழகும் பெறுமதியும் உள்ளனவாக உள்ள அதேவேளை எம்மைக் கடந்த காலத்துடன் இணைப்பனவாயுமுள்ளன.

இந்த ஒளிப்படம் மாட்டுவண்டியின் சில்லும் அச்சாணியும். இது காரைநகரில் எடுக்கப்பட்டது.

tilaxan 6.jpg

எனது தொழிலில் வயது, நேரம், உழைப்பு என்பன முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த கருப்பொருளிற்க்கு இவ் ஒளிப்படம் நல்ல உதாரணம் ஆகும். கைகள். புயங்கள், மார்பு ஆகியவற்றிலுள்ள தோல்ச்சுருக்கமும் வேட்டியில் காணப்படும் சுருக்கமும் காலப்போக்கிற்கேற்ப எம்மீது உருவாகும் காலத்தின் அடுக்குகள் போன்றவை அத்தோடு இம்முதியவரின் முதிர்ச்சியையும். கடின உழைப்பையும் வெளிப்படுத்துகின்றது. வாழ்நாள் முழுவதும் பல புத்தகங்களினை விற்ற, சேகரித்த புத்தகங்களில் ஒன்றான இப்புத்தகம் அதிகம் பாவனைக்குட்பட்டு அதன் மட்டையினை இழந்துள்ளபோதிலும் அதனது உரிமையாளருக்கு ஏதோவொரு காரணத்தால் மிகப்பெறுமதியானது.

இது காரைநகரில் வாழும் கந்தப்பு எனும் பெயருடைய ஐயா அவரது புகழ் பெற்ற பல பழைய புத்தகங்களில் ஒன்றை வாசித்துக்கொண்டிருக்கும் படம் ஆகும்.

Tilaxan photo 2.jpg

இங்கே நான் எனது ஆர்வங்களான போக்குவரத்து, வயது, உழைப்பு, இயற்கை அழகு ஆகியவற்றினை ஒன்றாக இணைத்துக் கொண்டுவந்துள்ளேன். கமராவின் குவிவுப்புள்ளி தெருவின் நடுவிலிருந்து தெளிவற்ற தூரம்வரைப் பார்க்கின்றது. அத்தோடு பார்வையாளனை அசைவு, நேரம் பற்றி சிந்திக்கவைக்கின்றது. தெருவானது அரைவட்ட வடிவில் குறைந்தது ஆயிரம் வருடங்கள் பழமையான மரங்களின் கிளைகளால் சூழப்பட்டதாகக் காணப்படுகின்றது. அதிலே தனியாக கள்ளு இறக்குபவனின் உருவம் காணப்படுகின்றது. இவன் தாழ்த்தப்பட்ட சமூகத்தினைச்சார்ந்த தொழிலாளி இவன் சாதிநிலைமையினைப் பிரதிநிதித்துவம் செய்கிறான் இருப்பினும் யாழ்ப்பாணத்தின் பொருளாதார நிலவரத்தில் மிகமுக்கியமானவன்.

இந்த ஒளிப்படம் மரங்கள் செழித்துள்ள ஓர் பாதையில் பயணிக்கும் ஓர் கள்ளு இறக்குபவனினைப் பின்னாலிருந்து பார்க்கின்றது. இப்பாதை கிளிநொச்சிக்கு அண்மையில் உள்ளது. அவனது பெயர் எனக்குத் தெரியாது.